சென்னை நவ, 8
விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழில், அதன் பிறகுதான் சேவைக்கு வரவேண்டும், வருமானத்தில் ஒரு பகுதியை மட்டுமே சேவைக்கு செலவிட வேண்டும் என்றும் ரசிகர்கள் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்றும் விஜய் உத்தரவிட்டதாக தெரிவித்தார்.