நெல்லை நவ, 6
நெல்லையில் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பாளையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் சட்ட மன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். திராவிட இயக்க வரலாறு குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் எழிலன், மாநில சுயாட்சி குறித்து சூரிய கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திராவிட மாடல் புத்தகத்தை எழிலன் சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார். தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி குறித்து நிர்வாகிகள் பேசினர்.இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், இளைஞரணி ஆறுமுகராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.