திண்டுக்கல் நவ, 5
பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கான 34வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 413 மாணவ- மாணவிகள் தங்கள் பட்டங்களை பெற்றனர். இவர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சார்ந்தவர்கள் ஆவர்.மேலும் இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் ரேங்க் பெற்று தர வரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள 3 மாணவர்களுக்கு கல்லூரி சார்பாக தங்கப்பதக்கங்களை கொடுத்து சிறப்பித்தனர்.
இவ்விழாவிற்கு விஜய்ஆனந்த் கிருஷ்ணன் Global Head- HRD & CHRO Manav Energy Private Limited, Bengaluru தலைமை தாங்கி பட்டங்களை அளித்தார். இவ்விழாவானது கல்லூரியின் தலைவர் தனலட்சுமி அம்மாள், முதன்மை தலைவர் ரகுராம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில் கல்லூரி முதல்வர் முனைவர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவின் சிறப்பு மாணவர்களிடையே வழங்கினார். விருந்தினர் சிறப்புரையாற்றி கிருஷ்ணன் அவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த ஆண்டு நடைபெற்றுவரும் வேலைவாய்ப்பில் சுமார்1028 மாணவ மாணவிகள் தங்கள் படிப்பை முடிக்கும் முன்பே பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் பட்டங்களைப் பெற்று அனைத்து மாணவ மாணவியர்களுக்கு பி.எஸ்.என்.ஏ கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.