தூத்துக்குடி நவ, 5
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மத்திய மாவட்ட பகுதிகளில் நாளை மற்றும் 7 ம் தேதி ஆகிய 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது. நாளை புதுக்கோட்டையில் மத்திய மாவட்டம் சார்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாப்படு கிறது. தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதேபோல் கந்தவேல்புரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.