தூத்துக்குடி அக், 30
சாத்தான்குளம் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி-பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
இவ்விழாவில் 235 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தார். தொடர்ந்து சமூகபாது காப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவிதொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித் தேவை உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களை பேருக்கு வழங்கினார்.
இவ்விழாவில் திருச்செந்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர், தாசில்தார் தங்கையா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சின்னத்தாய், திமுக. மாணவர் அணி துணைச் செயலாளர் உமரி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.