Spread the love

கள்ளக்குறிச்சி நவ, 4

சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன.

இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஏராளமானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி, அவர்களுக்கு தற்காலிகமாக வேறு இடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே பள்ளியை சீரமைக்க அனுமதிக்க கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின்பேரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள் அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சரஸ்வதி, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *