புதுச்சேரி நவ, 4
லாசுப்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதனுக்கு பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் லாஸ்பேட்டையில் உள்ள கோவில்களில் வழிபட்டார்.
பின்னர், சட்ட மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியன் முன்னாள் அமைச்சர் கமலகண்ணன் மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
மேலும் அவரது பிறந்தநாளையொட்டி சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதன், லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த 10 மற்றும்12-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, கமலா அறக்கட்டளையில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.