சென்னை நவ, 4
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.