திண்டுக்கல் நவ, 3
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரி படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் தங்களின் கல்வி நிறுவனங்கள் மூலம் வருகிற 11 ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம். https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் செயல்படும் உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம். உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவிகள் ஆதார் அட்டை, கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண், மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.