சென்னை நவ, 5
நிகழாண்டில் பொறியியல் படிப்புகளில் முதல், 2-ம் பருவங்களில் தமிழ் பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், முதல் பருவத்தில் தமிழர் மரபுகள் என்ற பாடமும், இரண்டாம் பருவத்தில் தமிழும் தொழில்நுட்பமும் என்ற பாடமும் அறிமுகப்படுத்தப்படும். அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் தமிழ் பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும் என்றார்.