காஞ்சிபுரம் நவ, 3
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பலத்த மழை கெட்டி வருகிறது. காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 31 ஏரிகள் முழு கொள்ளவை எட்டி உள்ளது. 37 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி உள்ளன. 143 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 326 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 373 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.