திண்டுக்கல் அக், 31
நொச்சிஓடைப்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் கன்னிமார் ஓடையில் தடுப்பணை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், அதிமுக. சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சுப்பிரமணி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீ ராம், உதவி பொறியாளர் பிரியங்கா, தொழில்நுட்ப உதவியாளர் ஆனந்தகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.