அரியலூர் அக், 31
சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரியலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டார்.
நேற்று அவர் அரியலூர் வாரணவாசியில் உள்ள பழமையான தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது 242 உயிரினங்களின் படிமங்களில் 10 மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருவது குறித்த கேட்டார். அதற்கு புவியியல் ஆய்வாளர் சந்திரசேகர் விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க அனைத்து பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.