அரியலூர் அக், 30
தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் 2 ம்தேதி முதல் 6 ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கான தேசிய அளவிலான தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் தமிழக அணியின் கேப்டனாக அரியலூர் மாவட்டம் திருமழபாடியை சேர்ந்த ராஜ்மகேஷ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அரியலூரை சேர்ந்த சன்மேக்கர் மற்றும் செல்வகணேஷ் ஆகிய வீரர்களும், தமிழக அணிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் டிசம்பர் மாதம் சென்னை மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இந்தியா, ஜிம்பாப்வே, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடரில் ராஜ்மகேஷ்வரன், செல்வகணேஷ், சன்மேக்கர் ஆகியோர் இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.