ஓசூர் அக், 29
கிருஷ்ணகிரி ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் உள்ள ஏரிக்கு கடந்த 18 வருடங்களாக தண்ணீர் வராமல் அந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக முத்தாலி ஏரி நிரம்பியது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பெரிய முத்தாலி, சின்னமுத்தாலி,பெத்த குள்ளு, சின்ன குள்ளு உள்ளிட்ட 10 கிராம மக்கள் நேற்று மாலை ஏரியில் தெப்பம் விட்டு, கிடா வெட்டி,பூஜை செய்தனர் மேலும் விவசாயிகள் கூறும்போது, கடந்த 2004 -ஆம் ஆண்டு நிரம்பிய ஏரி, பின்னர் அடுத்தடுத்து மழை இன்றி ஏரியில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது.இந்த வருடம் கனமழையின் காரணமாக ஏரி நிரம்பியது. இதனால் நாங்கள் கங்கா பூஜை செய்து வழிபட்டோம்.