கோயம்புத்தூர் அக், 29
கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கடன் திட்ட புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி வெளியிட்டார். முதல் பிரதியை கனரா வங்கி உதவி பொதுமேலாளர் எஸ்.பாபு, ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் அமிர்தவள்ளி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சமீரன் அளித்த உரையில், நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து வெளியிடுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்திலேயே மிகவும் அதிகபட்சமாக 2022-23-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவித்தார்