மேட்டுப்பாளையம் அக், 30
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் குமரன்குன்று ஈஸ்வரியம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் டபிள்யூ.டபிள்யூ. எப் இயற்கை தொண்டு நிறுவனம் சார்பில் மிஷன் இயற்கை என்ற சுற்று சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பு குறித்த கல்வியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடம் இயற்கையின் அவசியம் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.