கோவை அக், 26
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதியில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை பட்டாசு கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் 290 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. 15 ம் தேதியே பட்டாசுகளின் விற்பனை தொடங்கிவிட்டது என்றாலும் கடந்த 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில்தான் பட்டாசுகளின் விற்பனை களைகட்டியது. மொத்தத்தில் மாநகர பகுதியில் மட்டும் இந்த ஆண்டில் ரூ.150 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.50 கோடி அதிகம் ஆகும்.