திருவண்ணாமலை அக், 28
வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஓடு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதாகவும் இதனால் மாணவர்கள் படிக்க முடியாது நிலை இருந்து வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்று பெருங்கடப்புதூர் கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில் கலந்து கொள்ள வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியிடம் பருவதம் பூண்டி கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.