திருவண்ணாமலை அக், 30
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24 மீ தேதி தொடங்கி டிசம்பர் 10 ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ற வகையில், அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தீபத் திருநாளில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.