அரியலூர் அக், 28
தமிழ்நாட்டின் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட பாரதியஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணா சிலை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாரதியஜனதா மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் திமுக. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.