திருச்சி அக், 25
முசிறி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் வரவேற்றார்.
இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டினார். விழாவில் நகர செயலாளர் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் தாண்டவ மூர்த்தி, நகர மன்ற ஊழியர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி துணை தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.