பெங்களூரு அக், 25
பெங்களூருவில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்து ராணி கமிலா வந்துள்ளார். 10 நாட்கள் பெங்களூருவில் தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுகிறார். ராணி ஆன பின்பு அவரது முதல் பயணம் இதுவாகும்.
இந்த நிலையில், ராணி கமிலா ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளார். அவருடன் தோழிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் பெங்களூருவுக்கு வந்துள்ளனர். ராணி கமிலா, இதற்கு முன்பு 7 முறை பெங்களூருவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் ராணியாக பதவி ஏற்ற பின்பு முதல் பயணமாக பெங்களூருவுக்கு வந்துள்ளார். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையம் உள்ளது. அந்த மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக ராணி கமிலா வந்திருப்பது தெரியவந்துள்ளது.