Spread the love

தர்மபுரி அக், 24

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்து உயர் கல்வியியல் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 389 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.95 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக இந்த தொகை சேர்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *