கடலூர் அக், 24
அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது அந்தமான் தீவுகளுக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து புயலாக மாறி வங்காளதேசம் அல்லது மேற்கு வங்க கரையோரம் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலூரில் நேற்று கன மழை பெய்தது. விட்டு, விட்டு பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.