தேனி அக், 23
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், எதக்கைப்பூண்டு, சணப்பு போன்றவை வேளாண்மை துறையின் மூலம் வழங்கிடவும், மழையினால் சேதமடைந்த பருத்தி பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையினை விரைந்து வழங்கிடவும், மேலும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாய நிலங்களை உழவு மற்றும் கவாத்து செய்திட எந்திரங்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்திடவும், ஆவின் பால் விலையை உயர்த்தி தருமாறும், அணைக்கரைப்பட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளதால் அங்கு பாலம் அமைத்துதரவும், ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 30 கண்மாய்களுக்கும் தண்ணீர் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், நீர் அளவீட்டுக் கருவிகள் அமைத்திடவும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முன் வைத்தனர்.