மதுரை அக், 23
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, கடந்த 2019-ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. சுற்றுச்சுவர் மட்டுமே கட்டுப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.