மதுரை அக், 21
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக. செயலாளராக 2-வது முறையாக மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று உசிலம்பட்டி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்க அவர் வந்தார். அப்போது செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி ஆகிய ஊர்களில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டிக்கு வந்த மணிமாறனுக்கு நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான செல்லம்பட்டி முத்துராமன், நகர் துணைச் செயலாளர் உதயபாஸ்கர், எழுமலை நகர் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான ஜெயராமன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.