மதுரை ஜூலை, 24
‘அரவிந்த் கண் ஆஸ்பத்திரி வண்டி வந்திருச்சி’ என்ற வார்த்தை இன்றும் கிராமங்களின் திண்ணையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. செக்-அப் முதல் ஆபரேஷன் வரை பல லட்சம் பேருக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை. இந்த குழுமத்தின் தலைவர் P.நம்பெருமாள்சாமி (86) உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.