மதுரை ஜூலை, 24
மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தன்னை கொலை செய்ய சதி நடந்ததாகவும், பாக்கிஸ்தானிற்கு தொடர்பிருப்பதாகவும் மதுரை ஆதீனம் பேசியதற்கு எதிரான வழக்கில் அவருக்கு முன்ஜாமினும் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் கூட நடக்காத கொடுமைகள் திமுக ஆட்சியில் நடப்பதாக விமர்சித்துள்ளார்.