மத்தூர் அக், 23
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி திரவுதியம்மன் கோவில் வளாகத்தில் கால்நடைத் துறை சார்பில் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி மற்றும் கால்நடை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்து கால்நடைக்ககான சிகிச்சை முகாமை தொடக்கி வைத்தனர்.
இம்முகாமில் மத்தூர் அரசு கால்நடை மருத்துவர் சுப்பிரமணி கால்நடைகளுக்கு தடுப்பூசி சிகிச்சை, கருவூட்டல், குடற்புழு நீக்கம் மற்றும் ஊட்டச்சத்து பவுடர் வழங்கல் உள்ளிட்ட சிகிச்சைகள் கால்நடைகளுக்கு அளித்தார். அதேபோல் சிறந்த கால்நடைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
மேலும் இம்முகாமில் ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உரிமை யாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.