புதுடெல்லி அக், 22
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், “நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும். தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://ctet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 24 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.