Spread the love

சென்னை அக், 21

மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கல்வியில் வழங்கும் 10 மற்றும் 12 ம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழை வைத்தே ஒரு மாணவரின் விவரங்கள் அடுத்தடுத்த படிநிலைகளில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, அதில் ஏதாவது தகவல்கள் பிழை இருந்தால் மாற்றுவது கடினம். அதற்காகவே அதில் உள்ள தகவல்களை ஒன்றிரண்டு முறைக்கு மேல் சோதனை செய்வது பள்ளிகளின் வழக்கம்.

கல்வியாண்டு 2023 இல் நடைபெற இருக்கும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வில் பங்கேற்க இருக்கும் மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி உட்பட சரிபார்த்து அனுப்புமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த வழிகாட்டுதலின்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் +2 பயிலும் மாணவர்களது பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின், அதன் விவரங்களை பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலுடன் இணைத்து அக்டோபர் 28 ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பிறகு அரசிதழில் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு அரசிதழில் உள்ள பெயர் விவரங்களை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *