பெங்களூரு அக், 22
பெங்களூரு சர்வதேச விமான நிலைய வளாகத்தில் கெம்பேகவுடாவுக்கு 108 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வருகிற 11 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார்.
இதற்காக கர்நாடகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புனித மண் சேகரித்து கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த புனித மண் சேகரிக்கும் பணிக்கான 20 ரதங்கள் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த வாகன ரதங்களை தொடங்கி வைத்தார்