Spread the love

சென்னை அக், 21

தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது.

டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளதால் கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது.

மேலும் முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும். அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *