மயிலாடுதுறை அக், 19
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், மேலையூர் ஊராட்சியில் காவிரி நகர் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை, ரூ.17.70 லட்சத்தில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள், தோட்டக்கலை நர்சரி கார்டன் மற்றும் கருவாழக்கரை கிராமத்தில் அங்கன்வாடி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி ஆணையர் மஞ்சுளா, ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், பொறியாளர் முத்துக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.