நெல்லை அக், 17
நெல்லை மாவட்ட ஊரக நிதி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நல்வலடி பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார்.
இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நவ்வலடி ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சரவண குமார், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் இசக்கி பாபு,ஜெஸி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,மாவட்ட மகளிர் அணி துணை அமைப் பாளர் சரோஜா, மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.