கடலூர் அக், 17
விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா நடந்தது.
இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் வரவேற்றார். வட்டார அட்மா குழு தலைவர்கள் விருத்தாசலம் குமார், பாவாடை கோவிந்தசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் இயற்கை விவசாயிகள் பாரம்பரிய ரகங்கள், சாகுபடி, விவசாயிகளின் தேவைகள், விற்பனை வாய்ப்புகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் நன்றி கூறினார். முன்னதாக பாரம்பரிய வேளாண் கண்காட்சியை சிறப்பாக செய்த விவசாயிகளுக்கு பாிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.