கீழக்கரை அக், 14
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பொது மக்களுக்கு இடைவிடாது சிறந்த பணியாற்றிய செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமூக நலத் தொண்டர்களுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வு நாளை மாலை 4 மணி அளவில் உசைனியா திருமண மஹாலில் நடைபெறுகிறது. இவ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்ற தலைவர் சஹானஸ் ஆபிதா, துணை நகர் மன்ற தலைவர் ஹமீது சுல்தான், காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், மாவட்ட தலைமை மருத்துவர் செய்யது ராசிக்தீன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளனர்.
மேலும் பல்வேறு துறையை தான் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.