ராமநாதபுரம் அக், 14
ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை பாரபட்சமின்றி மீட்க வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக ராமநாதபுரம் புதிய பேருந்துநிலையம் எதிரில் அம்மா உணவகத்தின் அருகே நகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் பல ஆண்டு காலமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை விரைந்து விசாரித்து தற்போது நகரசபைக்கு ஆதரவாக தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மேற்கண்ட ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்தவர்களிடம் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து நகரசபை நிர்வாகத்தின் சார்பில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் மேற்கண்ட நகராட்சி தலைவர் கார்மேகத்தின் தீவிர முயற்சியால் நகரசபைக்கு சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.