கீழக்கரை அக், 16
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணாக்கர் சங்கம் – HPSAA மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணாக்கர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நிகழ்ச்சி ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹமீதியா மெட்ரிகுலேசன் பள்ளி, ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முகைதீனியா மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய நான்கு பள்ளிக்கூடங்களுக்கும் மூன்று பகுதிகளாக நடைபெற்றது.
இதில் 400க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து பயன்பெற்றனர். இதில் ஹமீதியா சங்கத்திலிருந்து முன்னாள் மாணவர்கள் சார்பாக அமீர் பாட்சா, ஃபைசல், அபுதாஹிர், மிஃப்தாஹுத்தீன், ஜாஹிர் ஹூசைன், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் Rtn. சுல்தான் சம்சூல் கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், ரோட்டரி உறுப்பினர்கள் சுந்தரம், சஃபீக், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்றவைகளை பற்றி எடுத்துரைத்தார்.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.