சென்னை அக், 14
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவது குறித்த ஆய்வுக்கூட்டம் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தலைமையில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் தூய்மை திட்டத்துறை செயலாளர் வினி மஹாஜன், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.