சென்னை அக், 13
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடுகையில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தமிழகத்தில் 7அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீங்கலாக 408 பி.வி எஸ்.சி படிப்புகளுக்கான இடங்களும், பி.டெக் படிப்புகளுக்கு 95 இடங்களும் உள்ளன. அக்டோபர் 3ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது.
இந்த ஆண்டு பிவிஎஸ்சி படிப்பிற்கு 13ஆயிரத்து 470 மாணவர்களும், பிடெக் படிப்புக்கு 2744 பேரும் என மொத்தம் இந்த ஆண்டு 16,214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். கடந்த 2020ம் ஆண்டு 15ஆயிரத்து 580 பேரும், கடந்த 2021ம் ஆண்டில் மொத்தம் 18,760 விண்ணப்பங்களும் பெறப்பட்ட நிலையில் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.