நாகப்பட்டினம் அக், 13
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.
சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச்சிறப்பு ஆகும். மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வரும் ஆர்க்டிக்டேன், இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன.