நாகப்பட்டினம் அக், 18
சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சார்பில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினர். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.
இதில் தாட்கோ கழக தலைவர் மதிவாணன், சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள், குருக்கத்தி அரசு வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள், வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.