அரியலூர் அக், 13
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஒரு வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை கண்டறிந்து நீக்கவும், வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இப்பணி அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1 ம்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணி தொடங்கப்பட்டதில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதின் அடிப்படையில் மாநில அளவில் அரியலூர் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.