தஞ்சாவூர் அக், 12
அரசினர் மகளிர் கல்லூரி முன்பு கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மகேஸ்வரி தலைமை தாங்கினார். மங்களம், சுமத்ரா, பாரதி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மேலும் அரசாணையை பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன முறையில் நேர்காணல் முறையை பின்பற்ற வேண்டும். ஊதிய உயர்வு மாநில தகுதி தேர்வினை உடனடியாக நடத்த வேண்டும். சட்ட கல்லூரிக்கு இணையான ஊதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கல்லூரி உதவி பேராசிரியர் எழுத்து தேர்வு முறையினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் கோஷம் எழுப்பினர்