விழுப்புரம் அக், 12
மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு கிராமிய பேண்டு கூட்டுக்குழலிசை நலச்சங்கத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். மேலும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, உதவி ஆணையர் (கலால்) சிவா, தமிழ்நாடு கிராமிய பேண்டு நலச்சங்கத்தின் மாநில தலைவர் சின்னப்பதாஸ், பொதுச்செயலாளர் தினேஷ் என்கிற திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ஜார்ஜ் வில்லியம், மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் சிவராமன், பொருளாளர் குமரகுரு, துணைத்தலைவர் பெஸ்கிஅகஸ்டின், துணை செயலாளர் அஜித்குரு, துணை பொருளாளர் உதயா, சட்ட ஆலோசகர் அறிவழகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.