ஈரோடு ஆகஸ்ட், 4
தீரன் சின்னமலை விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு சிலை வைக்கப்பட்டு உள்ளது. ஆடி 18-ம் தேதியான நேற்று தீரன் சின்னமலை நினைவு நாள் ஆகும்.
இதையொட்டி அவருடைய சிலைக்கு பல்வேறு அரசியல் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், அறச்சலூர் பேரூராட்சி தலைவர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
#Vanakambharatham#Erode#Dheeranchinnamalai#news