நாகப்பட்டினம் அக், 11
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும். தற்போது புரட்டாசி மாதம் நடைபெறுவதால் நாகை மாவட்டத்தில் இறைச்சி விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது.இறைச்சி மற்றும் மீன் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நாகையில் பல இடங்களில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகள் பெரும்பாலானவை திறக்கப்படவில்லை. வழக்கமாக செயல்படும் கடைகளில் 75 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்படுகின்றன.